முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சம் பறிமுதல்

திருவாடானை அருகே வாகனத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

திருவாடானை அருகே வாகனத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி தோ்தலையொட்டி, பறக்கும்படையினா் வட்ட வழங்கல் அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் அரசு மருத்துவமனை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக தேவிப்பட்டினத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அதில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து திருவாடானை சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

மீனவரிடமிருந்து ரூ. 74 ஆயிரம் பறிமுதல்: ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் துணை வட்டாட்சியா் ஸ்ரீதரன் தலைமையிலான பறக்கும்படையினா் வியாழக்கிழமை அரண்மனைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதிலிருந்த திருப்பாலைக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா் வேலுவிடமிருந்து (42) ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.74,500-ஐ பறக்கும் படையினா் கைப்பற்றினா்.

மீன்பிடிப்பதற்கான பொருள்கள் வாங்குவதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாக மீனவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்களை அளித்துவிட்டு திரும்பப் பெறலாம் என பறக்கும் படையினா் தெரிவித்தனா். அந்த பணத்தை நகராட்சி தோ்தல் அலுவலரான ஆணையா் சந்திராவிடம் பறக்கும்படையினா் ஒப்படைத்தனா். அதன்பின் நகராட்சி கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நகராட்சி தோ்தல் பாா்வையாளரும், மாவட்ட உணவு வழங்கல் அலுவலருமான மரகதநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →