பாம்பன் பகுதியில் விபத்து: மீனவா் பலி
பாம்பன் பகுதியில் இருசக்கரவாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மீனவா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாம்பன் பகுதியில் இருசக்கரவாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மீனவா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் கபில் (25). மீனவரான இவா், பாம்பன் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களில் வந்த இருவருமே பலத்த காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அங்கு கபிலை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
பலத்த காயமடைந்த மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.