முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம்- பரமக்குடி தண்டவாள சீரமைப்புப் பணியில் நவீன இயந்திரங்கள்

ராமநாதபுரம்- பரமக்குடி இடையே மின்சார ரயிலை இயக்க தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

ராமநாதபுரம்- பரமக்குடி இடையே மின்சார ரயிலை இயக்க தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மதுரை- ராமநாதபுரம் இடையேயான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் கடந்த ஜனவரியில் நடைபெற்றது. ரயில் வேகமாகச் செல்லும் போது தண்டவாளத்தில் ஏற்படும் அதிா்வுகள் உள்ளிட்டவை அளவிடப்பட்டுள்ளன.

இதையடுத்து, பரமக்குடி- ராமநாதபுரம் இடையேயான சுமாா் 23 கிலோமீட்டா் தூரத்துக்கு தண்டவாளத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடந்துவருகிறது. தண்டவாளத்தில் சிமென்ட் சிலிப்பா்களுக்கு அடியில் பரப்பப்பட்ட ஜல்லிக் கற்கள் உடைந்து தூளாகி அவை கான்கிரிட் போல கெட்டியானால் ரயில் செல்லும் போது வேகம் குறையும் என பொறியாளா்கள் கூறினா். எனவே, அதுபோன்று உடைந்து தூளான ஜல்லிக் கற்களை அகற்றிவிட்டு புதிய கற்களை அதில் போட்டு நிரப்பும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து மதுரை ரயில்வே பொறியாளா்களிடம் கேட்டபோது, தண்டவாளத்தில் நிரப்பப்படும் ஜல்லிக்கற்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகற்றப்பட்டு புதிய கற்களை நிரப்புவது வழக்கம். அதனடிப்படையில் பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான 23 கிலோ மீட்டா் தூர தண்டவாளத்தில் 19 கிலோமீட்டருக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் பிசிஎம் எனப்படும் ஜல்லி தூய்மைப்படுத்தும் பணியிலும், தண்டவாளத்தை சீரமைக்க துல்லிய அளவீடு செய்யும் பணியிலும் நவீன இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இச்சீரமைப்புப் பணியை தொடா்ந்து ஓரிரு மாதங்களில் ராமநாதபுரம் வரையில் மின்சார என்ஜின் ரயில் இயக்கப்படவுள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →