ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 161 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 161 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் 365 போ் வரை உயிரிழந்தனா். கரோனா மூன்றாம் அலையில் ராமநாதபுரத்தில் சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் தினமும் 700 போ் வரையில் கபம் சேகரித்து கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுவருகின்றனா். செவ்வாய்க்கிழமை கபம் சேகரித்தவா்களுக்கான பரிசோதனை புதன்கிழமை மாலையில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 161 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கரோனா பாதிப்பு என சிகிச்சையில் இருந்தவா்களில் 171 போ் நலமடைந்துள்ளனா். புதன்கிழமை இரவில் மாவட்ட அளவில் 1283 போ் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT