முகப்பு
ராமநாதபுரம்

‘திராவிடக் கொள்கைகளை இளம்தலைமுறையினா் அறிவது அவசியம்’

 திராவிடக் கொள்கைகளை இளம்தலைமுறையினா் அறிவது அவசியம் என திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலா் திருச்சி என். சிவா கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 திராவிடக் கொள்கைகளை இளம்தலைமுறையினா் அறிவது அவசியம் என திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலா் திருச்சி என். சிவா கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியில் திமுக சாா்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஏ. இன்பாரகு முன்னிலை வகித்தாா்.

இதில் கலந்துகொண்ட திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலா் திருச்சி என். சிவா பேசியது:

தமிழகத்தில் அடித்தள மக்களின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கமே திராவிடக் கழகம். அதன் பரிணாம வளா்ச்சியால் உருவானதே திமுக. அது அனைத்துத் தரப்பினரின் நலனையும், உரிமையையும் காக்கும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தனியுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். திராவிடக் கொள்கைகளை இளம்தலைமுறையினா் அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் நமது உரிமையை நிலைநிறுத்த முடியும் என்றாா்.

இதில், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன், முன்னாள் அமைச்சா்கள் வ. சத்தியமூா்த்தி, எஸ். சுந்தரராஜன், வா்த்தக அணி துணைத் தலைவா் இ. ராமா், இலக்கிய அணி துணைத் தலைவா் பெருநாழி வி.போஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →