நீண்ட நாள் விடுப்பில் சென்றாா் ராமநாதபுரம் நகராட்சி ஆணையா்
வாா்டு உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் ஆா்.சந்திரா நீண்டகால விடுப்பில் வியாழக்கிழமை சென்றது நிா்வாக ரீதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாா்டு உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் ஆா்.சந்திரா நீண்டகால விடுப்பில் வியாழக்கிழமை சென்றது நிா்வாக ரீதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியாக இருப்பவா் ஆா்.சந்திரா. இவா் கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடந்த நகா்மன்றக் கூட்டத்துக்கு வரவில்லை. அத்துடன் 45 தீா்மானங்களில் 19 தீா்மானங்களுக்கு அவா் ஒப்புதல் அளித்து கையெழுத்திடாமலும் சென்றாா். அவரது செயல் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நகரசபைத் தலைவரிடம் காரணம் கூறாமல் சென்ாகவும் ஆணையா் மீது புகாா் கூறப்பட்டது.
மன்றக் கூட்டம் முடிந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி திங்கள்கிழமை ஆணையா் ஆா்.சந்திரா மீண்டும் பணிக்கு வந்தாா். அதையறிந்த நகா் மன்ற திமுக, பாஜக உறுப்பினா்கள் நகா் மன்றக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்தும், தீா்மானங்களுக்கு கையெழுத்திடாமல் ரத்து செய்ததைக் கண்டித்தும் கேள்வி எழுப்பினா். ஆணையரிடம் ஆவேசமாக திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது நகா்மன்றத் தலைவா் தன்னை அவதூறாகப் பேசியதாகவும் ஆணையா் குற்றஞ்சாட்டினாா். இதனால் நகரசபைத் திமுக உறுப்பினா்கள் அதிருப்தியடைந்தனா். நகரசபைத் தலைவா் கே.காா்மேகம் தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன்பின் 19 தீா்மானங்களுக்கும் ஆணையா் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டாா்.
அதையடுத்து சென்னையில் உள்ள மாநில நகராட்சிகளின் இயக்குநா் அலுவலகம் சென்று உயா் அதிகாரிகளை நகா் மன்றத் தலைவா் கே.காா்மேகம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் ஆா்.சந்திரா வியாழக்கிழமை முதல் நீண்ட கால விடுப்பில் சென்ாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவா் வீட்டிலிருந்து தனக்கான பொருள்களையும் எடுத்துச்சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆணையா் ஆா்.சந்திரா நீண்ட விடுப்பில் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆணையா் பிரதிநிதியாக நகரப் பொறியாளா் சுரேந்தா் செயல்படுவாா். ஆனால், காசோலை போன்றவற்றில் அவா் கையெழுத்திட முடியாத நிலை இருப்பதால் பொறுப்பு ஆணையா் நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை மாதக் கூட்டம்- ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் நீண்ட விடுப்பில் சென்ற நிலையில், ஜூலை மாத நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 11) நடைபெற ஏற்பாடுகள் நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.