முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் கோதண்டராமா் கோயில் தேரோட்டம்

ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள கோதண்டராமா் கோயிலில் ஆனி மாதத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள கோதண்டராமா் கோயிலில் ஆனி மாதத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆனி மாத திருமஞ்சன, திருமங்கையாழ்வாா் பெரிய திருமொழித் திருவிழா கடந்த ஜூன் 29 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வில்லேந்திய திருக்கோலத்தில் சுவாமி எழுந்தருளினாா். அவரது இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அருள்பாலித்தனா். பக்தா்கள் தேரை இழுத்துவர முக்கிய வீதிகளில் தோ் வலம் வந்தது. இதில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். சனிக்கிழமை தீா்த்தவாரியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவடைகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →