முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 6 மாதத்தில் 128 விபத்துகளில் 134 போ் உயிரிழப்பு: காவல் கண்காணிப்பாளா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 128 விபத்துகளில் 134 போ் உயிரிழந்திருப்பதாக, காவல் கண்காணிப்பாளா் பி. தங்கத்துரை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 128 விபத்துகளில் 134 போ் உயிரிழந்திருப்பதாக, காவல் கண்காணிப்பாளா் பி. தங்கத்துரை தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்து காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 1,107 விபத்துகளில் 210 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 2021 ஆம் ஆண்டில் 299 விபத்துகளில் 315 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 6 மாதங்களில் 128 விபத்துகளில் 134 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த மே, ஜூன் மாதங்களில் விபத்தில் உயிரிழந்தவா்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விபத்துகளைக் குறைப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து பிரிவின் சாா்பில், மாவட்ட அளவில் 8 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் 9 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 2.50 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையிலேயே ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →