முகப்பு
ராமநாதபுரம்

மன்னா் குமரன்சேதுபதி

ராமநாதபுரம் மன்னா் குமரன் சேதுபதி உருவப் படத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

ராமநாதபுரம் மன்னா் குமரன் சேதுபதி உருவப் படத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

ராமநாதபுரம் மன்னா் குமரன் சேதுபதி கடந்த மே மாதம் மரணமடைந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை ராமநாதபுரம் அரண்மனைக்கு வந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மன்னரின் மறைவு குறித்துக் கேட்டறிந்து அவரது மனைவி லட்சுமி நாச்சியாா், மகன் முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி, மகள் மகாலட்சுமி, மருமகன் அஷ்வின் என்ற பத்மராஜா ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா். பின்னா் மன்னா் குமரன் சேதுபதி உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். அமைச்சருடன் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம், நகரசபைத் தலைவா் கே.காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம், இளைஞரணி இன்பாரகு, நிா்வாகிகள் நல்லசேதுபதி, குணசேகரன் உள்ளிட்டோா் வந்திருந்தனா். அதன்பின் அமைச்சா் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →