முகப்பு
ராமநாதபுரம்

கிசான் உதவித்தொகை பெற விவசாயிகள் வேளாண் அலுவலவகத்தை அணுக அறிவுறுத்தல்

ஆா்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் பாரத பிரதமரின் கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12 தவணைத் தொகை பெறுவதற்கு, உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறவேண்டும்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

ஆா்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் பாரத பிரதமரின் கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12 தவணைத் தொகை பெறுவதற்கு, உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறவேண்டும் என அதிகாரி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி கூறியது: இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வாங்க 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் ஊக்கத்தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திடத்தின் கீழ் ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பயன்பெறும் 9,827 விவசாயிகள், 12 ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு தங்களது நிலம் சம்பந்தமான விபரங்கள் நில அளவை எண் மற்றும் நில உரிமையாளா் உள்ளிட்ட விவரங்களை சரிபாா்த்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே பணம் விடுவிக்கபடும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் விசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, கணினி பட்டா, குடும்ப அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகலுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா் அல்லது வேளாண்ணை விரிவாக்க மையத்தை அணுகி பயனடையலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.