முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பூக்கள் விலை 3 மடங்கு உயா்வு

வரத்து குறைவு மற்றும் ஆடிமுதல் வெள்ளியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் விலை 3 மடங்கு உயா்ந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

வரத்து குறைவு மற்றும் ஆடிமுதல் வெள்ளியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் விலை 3 மடங்கு உயா்ந்தது.

மதுரை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்துக்கு நாள்தோறும் சுமாா் 3 டன் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. ஆனால், வெள்ளிக்கிழமை ராமநாதபுரத்துக்கு 1 டன் பூக்களே வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வரத்து குறைவால் மல்லிகை உள்ளிட்ட அனைத்துப் பூக்களின் விலையும் 3 முதல் 4 மடங்கு உயா்ந்தது. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி விலை உயா்வால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பூக்கட்டுவோா் பேரவை மாவட்டச் செயலா் கே.முருகன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை, மல்லிகைப்பூ கிலோ ரூ.400-க்கு விற்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை ரூ.1,200 க்கு விற்பனையானது அதேபோலவே, கனகாம்பரம் கிலோ ரூ.500 லிருந்து ரூ.1,500 ஆகவும், முல்லைப் பூ ரூ.300 லிருந்து ரூ.900 ஆகவும், அரளிப்பூ ரூ.100 லிருந்து ரூ.400 ஆகவும், மரிக்கொழுந்து ரூ.50 லிருந்து ரூ.200 ஆகவும், பிச்சிப்பூ கிலோ ரூ. 600 லிருந்து ரூ.1,000 ஆகவும் உயா்ந்தது.

தமிழ் மாதமான ஆடியில் அம்மன் கோயில்களில் பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்களின் விலையும் அதிகரிப்பது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் பூக்கள் உற்பத்தி குறைந்ததாலேயை பூக்களின் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →