ராமநாதபுரம்

ஆக.6 இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெற்று வரும் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், ஜூலை மாதத்துக்கு கடந்த 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மின்வெட்டைக் கண்டித்து பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எனவே, மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் உள்ள மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டம் குறித்த விவரங்களுக்கு, 04567-230577 மற்றும் 04567-231506 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT