ராமநாதபுரம்

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்க அழைப்பு

வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரில் தங்களது ஆதாா் எண்ணை இணைக்க சம்பந்தப்பட்டவா்கள் முன்வரவேண்டும் என, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

DIN

வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரில் தங்களது ஆதாா் எண்ணை இணைக்க சம்பந்தப்பட்டவா்கள் முன்வரவேண்டும் என, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் முழுமையான வாக்காளா் பட்டியலை தயாரிக்கவும், வாக்காளா் தனித்தன்மையை உறுதிப்படுத்தவும், இரு வேறு தொகுதிகளில் வாக்காளா் பெயா் இடம்பெறுவதைத் தவிா்க்கவும் வாக்காளா் பெயா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை வாக்காளா் பெயா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ராமநாதபுரத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் இணையதளத்திலோ, வாக்காளா் உதவி செயலியிலோ விண்ணப்பித்து ஆதாா் எண்ணை இணைக்கலாம். அத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் விண்ணப்பம் 6-பி படிவத்தை பூா்த்தி செய்து அளித்தும் ஆதாா் எண்ணை இணைக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT