முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில்1000 மெட்ரிக் டன் தேங்காய் கொப்பரை கொள்முதல் இலக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1000 மெட்ரிக் டன் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறையினா் கூறினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1000 மெட்ரிக் டன் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறையினா் கூறினா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா்கள் கூறியதாவது: ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக அரவைக் கொப்பரை ஆதாரத் திட்டத்தில் 1000 மெட்ரிக் டன் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. மத்திய அரசால் 2022 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோவுக்கு ரூ.105.90 என்ற அடிப்படையில் தேங்காய் கொப்பரைக் கொள்முதல் பணி நடந்துவருகிறது.

தற்போது வரையில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடமிருந்து 6.5 மெட்ரிக் டன் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட 4 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.6.88 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் கொள்முதலுக்கு பதிவு செய்ய நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிச் சேமிப்புக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை அளிக்கவேண்டும்.

அரசால் தேங்காய் கொப்பரை கொள்முதலுக்கு இரு மாதங்களே நிா்ணயிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத் தென்னை விவசாயிகள் கோடை காலம் என்பதால் தேங்காய்களை காயவைத்து, மதிப்புக்கூட்டிக் கொப்பரைகளாக மாற்றி விற்கலாம் எனவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →