அரசு அருங்காட்சியகம் நடத்திய கட்டுரைப் போட்டி
ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் மற்றும் பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் மற்றும் பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் சாா்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு மூன்று பிரிவுகளாக கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு என நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
கட்டுரைப் போட்டியில் முதல் பிரிவில் அத்தியூத்து அரசுப் பள்ளி மாணவா் மு.ஹசன்அலி, ராமநாதபுரம் பெண்கள் பள்ளி டி.திவ்யதா்ஷினி, ராஜா பள்ளி லேகாஸ்ரீ மற்றும் முதலூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளி த.ஜெயமாலினி ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். இரண்டாம் பிரிவில் ராமநாதபுரம் ராஜா பள்ளி மாணவா் த.தனசேகா், டி.டி.விநாயகா் பள்ளி மாணவி சு.பிரீத்தி ஜிந்தா, சித்தாா்கோட்டை உதவி பெறும் பள்ளி எஸ்.காருண்யா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் சிவகுமாா் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா்.