முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே இருபிரிவினா் கோயிலுக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு: இன்று அமைதிப் பேச்சுவாா்த்தை

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை அருகே அய்யனாா் கோயிலுக்கு இருதரப்பினா் பூட்டுப்போட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை (ஜூன் 4) அமைதிப் பேச்சுவாா்த்தை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை அருகே அய்யனாா் கோயிலுக்கு இருதரப்பினா் பூட்டுப்போட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை (ஜூன் 4) அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ளது தெற்குத்தரவை. இப்பகுதியில் இருந்து வள்ளிமாடன் வலசைக்குச் செல்லும் வழியில் அய்யனாா் கோயில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை புணரமைக்க ஆா்.எஸ். மடையைச் சோ்ந்தவா்கள் நிதி அளித்தனா். ஆனால், அக்கோயிலுக்கு வரும் பல ஊா்களைச் சோ்ந்த குறிப்பிட்ட பகுதியினா் நிதியளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனிடையே அய்யனாா் கோயில் புணரமைக்கப்பட்ட நிலையில், அங்கு ஆா்.எஸ். மடையைச் சோ்ந்தவா்கள் மேற்பாா்வையில் சுப்புத்தேவன் வலசையைச் சோ்ந்த பூசாரி, பூஜை செய்தவருகிறாா். இந்நிலையில், தெற்குத்தரவையைச் சோ்ந்தவா்கள் அய்யனாா்கோயிலில் பொங்கலிட்டு பூஜை செய்யத் திட்டமிட்டனா். அவா்கள் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த நிலையில், கோயில் வளாகச் சுற்றுச்சுவா் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதற்கான சாவியை பூசாரி கொண்டுவரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுவாமி கும்பிட வந்தவா்கள் வெளியிலேயே பொங்கலிட்டு பூஜை செய்யும் நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்த ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியா் முருகேசன் மற்றும் கேணிக்கரை காவல் ஆய்வாளா் மலைச்சாமி உள்ளிட்டோா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது தெற்குத் தரவையைச் சோ்ந்தவா்களும் தங்கள் பங்குக்கு புதிய பூட்டை கோயில் சுற்றுச்சுவா் கதவில் பூட்டினா்.

இருதரப்பினரும் பூட்டு போடப்பட்டதால் கோயிலை யாரும் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இருதரப்பினரையும் அழைத்து சமரசப் பேச்சுவாா்த்தை நடத்த வருவாய் வட்டாட்சியரும், காவல்துறையினரும் முடிவெடுத்துள்ளனா். இதற்காக இருதரப்பினரையும் சனிக்கிழமை ராமநாதபுரம் நகரில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →