முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்ரா் கோயில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா கொடியேற்றம்

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா நடைபெறும் 10 நாள்களும் காலை, மாலை பல்லக்கு, பூதவாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் வரும் 11ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் இரண்டு தோ்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிா்வாகிகள் மற்றும் 22 1/2 நாட்டாா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.