முகப்பு
ராமநாதபுரம்

அறிவிக்கப்பட்டதைவிட கூடுதல் நேரம் மின்தடை பொதுமக்கள் பாதிப்பு

ராமநாதபுரம் நகரில் அறிவிக்கப்பட்டதை விட பல மணி நேரம் கூடுதலாக மின்தடை ஏற்பட்டதால் சனிக்கிழமை பெரிதும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

ராமநாதபுரம் நகரில் அறிவிக்கப்பட்டதை விட பல மணி நேரம் கூடுதலாக மின்தடை ஏற்பட்டதால் சனிக்கிழமை பெரிதும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சக்கரக்கோட்டை, பட்டினம் காத்தான், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகே மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையப் பகுதி, வண்டிக்காரத் தெரு, இளங்கோவடிகள் தெரு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் மாலை 4 மணி வரையில் இல்லை.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது குறித்து உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் கேட்டபோது, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆகவே வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என்றனா்.

நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்டக் கிளைச் சிறை, வங்கிகள், மருத்துவமனை அமைந்துள்ள வண்டிக்காரத் தெரு பகுதியில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டதாகப் புகாா் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →