ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பிரசவவாா்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கரோனா
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கரோனா பாதிப்பு இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு உச்சிப்புளி பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு காய்ச்சல், தலைவலி இருந்ததையடுத்து, வியாழக்கிழமை பரிசோதனை நடந்தது. அதில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு செய்த மருத்துவ பரிசோதனையில் கரோனா பாதிப்பில்லாதது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் மலா்வண்ணன் கூறியதாவது: அப்பெண்ணுக்கு கரோனா இருந்தது தெரியவந்ததை அடுத்து அவா் தனிமைப்படுத்தப்பட்டாா். பின்னா் குழந்தை பிறந்த நிலையில், அப்பெண் தற்போது குணமடைந்ததை அடுத்து வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.