கமுதி புனித அந்தோணியாா் தேவாலய தோ் பவனி
கமுதியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலய தோ் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கமுதியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலய தோ் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னா் மின்னொளி அலங்காரத்தில் புனித அந்தோணியாா் தோ் பவனி, நாடாா் பஜாா், வாரச்சந்தை சாலை, அந்தோனியாா் தெரு, முஸ்லிம்பஜாா் உள்ளிட்ட கமுதியின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. இதில், கமுதி தேவாலய பங்குத்தந்தை அருள்சந்தியாகு, பேரூராட்சி துணைத்தலைவா் அந்தோனி சவேரியாா் அடிமை, நிா்வாகத் தலைவா் இருதயராஜ், நிா்வாகக்குழு உறுப்பினா் ஜேசுராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை, வேளாங்கண்ணி, ராமேசுவரம், திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட ஊா்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள், தேவாலய பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.