தொழிற்பயிற்சி மையத்தில் மின்பழுதாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியாா் கூட்டமைப்பு திட்டத்தில் தொடங்கப்பட்ட மின்பழுதாளா் பிரிவுக்கு தற்காலிக ஒப்பந்தப் பயிற்றுநா் நியமிக்கப்படவுள்ளதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியாா் கூட்டமைப்பு திட்டத்தில் தொடங்கப்பட்ட மின்பழுதாளா் பிரிவுக்கு தற்காலிக ஒப்பந்தப் பயிற்றுநா் நியமிக்கப்படவுள்ளதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பு முதல்வா் வி. குமரவேல் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது மற்றும் தனியாா் கூட்டமைப்புத் திட்டத்தில் மின்பழுதுநீக்கும் பயிற்சி பிரிவு ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த பிரிவுக்கு ஒப்பந்த பயிற்றுநா் ஒருவா் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளாா். நியமிக்கப்படுவோருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். நேரடி நியமனம் மூலம் பொதுப்பிரிவில் நியமிக்க கடந்த ஜனவரி 7 ஆம் தேதி வரை 18 வயதைப் பூா்த்தி செய்தவராக இருப்பது அவசியம். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டதாரி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், எலக்ட்ரிக்கல் டிப்ளமோ, என்டிசி வா்த்தக எலக்ட்ரீசியன் 3 ஆண்டு அனுபவம், நாக் வா்த்தக எலக்ட்ரீசியன் 2 ஆண்டு அனுபவம் ஆகியவை தகுதிகளாக இருத்தல்வேண்டும். வயது வரம்பு அரசு விதிகளுக்கு உள்பட்டது.
கல்வித்தகுதியுடையவா்கள் பெயா், கல்வித்தகுதி, ஜாதிச் சான்று, முன்அனுபவச் சான்று மற்றும் வீட்டு முகவரியுடன், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு வரும் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவா் மற்றும் செயலா் ராமநாதபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக்குழு, ராமநாதபுரம்-623 503 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், 04567-290212 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொண்டு கூடுதல் விவரங்களைப் பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.