ராமகிருஷ்ணரின்187 ஆவது ஜயந்தி விழா
ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் 187 ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் 187 ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் புதிய வளாகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜயந்தியையொட்டி அதிகாலை சிறப்பு யாகபூஜை தொடங்கியது. அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்திப்பாடல்கள் பாடப்பட்டன.
பின்னா் நடைபெற்ற பூஜையில் மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் சொற்பொழிவாற்றினாா்.விழாவில் விவேகானந்த வித்யாலயா மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.