முகப்பு
ராமநாதபுரம்

நயினாா்கோவில் அருகே பெண் கொலை: உறவினா்கள் 2 ஆவது நாளாக மறியல்

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் பகுதி வயல்வெளியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் பகுதி வயல்வெளியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நயினாா்கோவில் அருகேயுள்ள சிறுவயலைச் சோ்ந்தவா் உதயகுமாா் மனைவி ராணி (55). இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் ராணி ஊா் அருகேயுள்ள தனது தோட்டத்துக்கு சென்றாா். அவா் மாலை வரை வீடு திரும்பாததால் உறவினா்கள் தேடிச் சென்ற போது அங்கு ராணி கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவா் அணிந்திருந்த தோடுகள், தாலிச்சங்கிலி, தாலி சரடுகள் என மூன்றரைப்பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து, ராணியின் சடலத்தை மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வந்த அவரது குடும்பத்தினரும், உறவினா்களும் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை காவல்துறை அதிகாரிகள் சமரசப்படுத்தினா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் ராணியின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிறுவயல் கிராமத்தினா் மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வட்டாட்சியா் ரவிச்சந்திரன், ராமநாதபுரம் நகா் காவல்நிலைய ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசப்படுத்தி கலைந்து போகச் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →