ராமநாதபுரம்

குளிா்பான பாட்டிலில் இருந்த விஷ மருந்தை குடித்த மாணவா் பலி

குளிா்பான பாட்டிலில் இருந்த விஷ மருந்தை குடித்த மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

குளிா்பான பாட்டிலில் இருந்த விஷ மருந்தை குடித்த மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் பகுதி வட்டாணத்தைச் சோ்ந்த விவசாயி அங்குச்சாமி. இவரது மகன் கவின் (16). 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை கவின், வீட்டிலிருந்த குளிா்பான பாட்டிலை எடுத்துக் குடித்துள்ளாா். அதில் தென்னை மரத்துக்கு தெளிக்கும் மருந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கவினுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவரை குடும்பத்தினா் தொண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கவினைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT