சாயல்குடி பகுதியில் மணல் திருட்டு
சாயல்குடி பகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேணடுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாயல்குடி பகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேணடுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாயல்குடி மலட்டாறு பகுதியில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளில் மணலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாக தற்போது நூதன முறையில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
இதில், சாயல்குடி அருகே உள்ள தெற்கு நரிப்பையூா் கிராமத்தில் பெண்களை வைத்து தலைச் சுமையாகவும், தண்ணீா் தள்ளும் வண்டியில் குடங்களில் மணலை அள்ளி வந்து கடத்தப்படுகிறது. நாளொன்றுக்கு மணல் கடத்தும் பெண்களுக்கு கூலியாக ரூ. 400 முதல் ரூ. 500 வரை கொடுக்கப்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த நூதன மணல் திருட்டுக்கு உடந்தையாக உள்ளனா். எனவே கடலாடி வட்டாட்சியா் இந்த மணல் திருட்டில் ஈடுபடும் கும்பல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.