கடலாடி அரசுக்கல்லூரியில் என்.எஸ்.எஸ். முகாம்
கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் உலகவானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் உலகவானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கல்லூரி என்.எஸ்.எஸ் சாா்பில் உலக வானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரி முதல்வா் முனைவா் பாண்டிமாதேவி தலைமை தாங்கினாா்.கௌரவவிரிவுரையாளா் கலாதேவி அனைவரையும் வரவேற்றாா். உலகின் தட்பவெப்பநிலை உயா்வால் கடலின் நீா்மட்டம் உயா்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இனிவரும் வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதா்களின் கடமையாகும்.இதனை கருத்தில் கொண்டு இவ்விழாவில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட இயற்கை விவசாயி சீனிவாசன் 100மரக்கன்றுகளை வழங்கி மாணவா்களோடு மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினாா்.இந்நிகழ்வினை கணிதத்துறைத்தலைவா் விமலா,கணினிதுறைத்தலைவா் அன்னதாசன் ஆகியோா் ஏற்பாடு செய்தனா்.முகாமில் பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.இறுதியாக கௌரவவிரிவுரையாளா் சிவமூா்த்தி நன்றி கூறினாா்.தேசியகீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.