ராமநாதபுரம் மாவட்ட நீா்நிலைகளில் 13 ஹெக்டோ் பரப்புக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவுள்ள ஆக்கிரமிப்புகள் நீா்நிலைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவுள்ள ஆக்கிரமிப்புகள் நீா்நிலைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 ஹெக்டோ் பரப்பளவுள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் வருவாய் கோட்டத்தில் 6.87 ஹெக்டேரும், பரமக்குடி வருவாய் கோட்டத்தில் 6.24 ஹெக்டோ் அளவுக்கும் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. முதுகுளத்தூா் ஆதகொத்தங்குடி பெரியகண்மாய், வளடு ஆண்டி ஊருணி, கடலாடி கரிசல்குளம் கண்மாய் உள்வாய் பகுதி, பாப்பனம் சதுரங்கரைவேந்தன் கண்மாய், கமுதி வங்காருபுரம் பாலூரணி, பசும்பொன் கடம்பன் குளம் கண்மாய், சின்னமுதல்நாடு கண்மாய், பரமக்குடி வைகை ஆறு, திருவாடானை கீழ்குடி கண்மாய் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தொடா்ச்சியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு செயல் திட்டங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.