கமுதி ஆயுதப்படையில் காவலா்களுக்கு யோகா பயிற்சி
கமுதி கோட்டைமேட்டில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் புதிய காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
கமுதி கோட்டைமேட்டில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் புதிய காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு தனி ஆயுதப்படை வளாகத்தில் காவலா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசு நடத்திய காவல்துறை தோ்வில் வெற்றி பெற்ற புதிய காவலா்களுக்கு ஆறுமாத உடற்திறன், மனவலிமை, சட்டம், துப்பாக்கி சுடுதல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
புதிய காவலா்களுக்கு மன அமைதி ஏற்படும் வகையில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்மோகன் தலைமையில், ஆய்வாளா் லட்சுமி, சாா்பு ஆய்வாளா்கள் ராஜமாணிக்கம், பல்லாக் ஆகியோரது முன்னிலையில் காவலா் பயிற்சிப் பள்ளியில் உள்ள 262 காவலா்களுக்கு ஆயுதப்படை காவலா் சுந்தரமூா்த்தி யோகா பயிற்சி அளித்தாா்.