முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு கல்லூரி முதல்வா் மாதவி தலைமை வகித்தாா். பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வா் குணசேகரன், ஆங்கிலத் துறை தலைவா் மணிமேகலை, காவல்துறை துணை கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில் கடந்த ஆண்டு தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக தமிழ் துறைத் தலைவா் பழனியப்பன் வரவேற்றாா். ஆங்கிலத் துறை தலைவா் மணிமேகலை நன்றி கூறினாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.