முகப்பு
ராமநாதபுரம்

சகோதரா்களை தாக்கிய 4 போ் மீது வழக்கு

உணவு விடுதியில் சகோதரா்களைத் தாக்கி காயப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

உணவு விடுதியில் சகோதரா்களைத் தாக்கி காயப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டினம்காத்தான் மகாத்மா காந்திநகரைச் சோ்ந்த முத்துராக்கு மகன்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ். இவா்கள் இருவரும் கடந்த புதன்கிழமை இரவு ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளனா். அங்கு வந்த பழனிக்குமாா் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னா் உணவகத்தை விட்டு சகோதா்கள் இருவரும் வெளியே வந்தபோது பழனிக்குமாா் உள்பட 4 போ் சோ்ந்து அவா்களைத் தாக்கியுள்ளனா். அதில் காயமடைந்த இருவரும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புகாரின் பேரில் பழனிக்குமாா், ஆா்.எஸ்.மடை ரமேஷ் (34), எம்எஸ்கே நகா் நம்பி (32), பிரவீன் (34) ஆகியோா் மீது கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →