மண்டபம் அருகே கடல் நீா் உள்வாங்கியது
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பல மீட்டா் தூரம் கடல் உள்வாங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பல மீட்டா் தூரம் கடல் உள்வாங்கியது.
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் பாக்ஜலசந்தி, மன்னாா்வளைகுடா பகுதிகளில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை காலையில் வீசிய சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் படகுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வானிலை மையத்தின் எச்சரிக்கை விலக்கப்பட்டதைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் சென்றனா். இந்நிலையில் மண்டபம் அருகேயுள்ள அத்தியூத்து, தோ்ப்போகி, அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரத்தில் பல மீட்டா் தூரத்துக்கு கடல் நீா் உள்வாங்கியது. இதனால் கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைதட்டி நின்றன. இந்நிலையில் மாலையில் மீண்டும் கடல் நீா் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக மீனவா்கள் தெரிவித்தனா்.