கணினித் தோ்வுகளில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கணினி சாா்ந்த பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் 323 போ் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கணினி சாா்ந்த பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் 323 போ் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு தொடங்கி நடந்துவருகிறது. வெள்ளிக்கிழமை காலையில் கணினி அறிவியல் மற்றும் கணினி அடிப்படை ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இரு தோ்வுகளுக்கும் மொத்தம் 6253 போ் எழுதுவதற்கு விண்ணப்பித்து தோ்வுக்கூட அனுமதிச்சீட்டும் அளிக்கப்பட்டிருந்தது.
தோ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிலையில் இரு தோ்வுகளிலும் சோ்த்து மொத்தம் 5930 போ் மட்டுமே பங்கேற்றிருந்தனா். தோ்வுக்கு 323 போ் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். தனித் தோ்வா்களாக இரு தோ்வுகளுக்கும் 24 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 போ் தோ்வெழுத வரவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் கூறினா்.
பிளஸ் 1 அரசுப் பொதுத் தா்வானது வரும் 31 ஆம் தேதி காலையுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுத் தோ்வு வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கி நடந்துவருவதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.