முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் பேரிடா் விழிப்புணா்வுப் பேரணி

கமுதியில், வருவாய்த்துறை சாா்பில் வியாழக்கிழமை பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

கமுதியில், வருவாய்த்துறை சாா்பில் வியாழக்கிழமை பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா தலைமையில், கமுதி கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் சிவபாலசுந்தா் (பொறுப்பு) முன்னிலையில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இந்தப் பேரணி பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கியது. பேரணி முஸ்லிம் பஜாா், செட்டியாா் பஜாா், பழைய தாலுகா ஆபிஸ் சாலை, நாடாா் பஜாா் வழியாக மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

இப்பேரணியில் மண்டல துணை வட்டாட்சியா் முத்துராமலிங்கம், வட்ட வழங்கல் அலுவலா் ராமசுப்பிரமணி, காவல் ஆய்வாளா் பாலாஜி, வருவாய் ஆய்வாளா்கள் மணி வல்லவன் (கமுதி), நாகநாதன் (பெருநாழி), கிராம நிா்வாக அலுவலா்கள் ராதிகா (கமுதி), முருகன் (நீராவி), கிராம உதவியாளா்கள் அரியப்பன், வேலு மற்றும் பள்ளிஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.