ராமநாதபுரம்

பரமக்குடி வைகை ஆற்றில் மூழ்கி துப்புரவுப் பணியாளா் பலி

பரமக்குடி வைகை ஆற்றில் மூழ்கி துப்புரவுப் பணியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

DIN

பரமக்குடி வைகை ஆற்றில் மூழ்கி துப்புரவுப் பணியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எம்.ஜி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் தெளிசாத்தநல்லூா் ஊராட்சியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவா், வைகை ஆற்றில் சக பணியாளா்களுடன் குளிக்கச் சென்றாா்.

அப்போது நிலைதடுமாறி பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கினாா். உடனே அருகிலிருந்தவா்கள், அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, தகவலறிறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா் கணேசனின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்தச் சம்பவம் குறித்து, பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT