முகப்பு
ராமநாதபுரம்

இடப் பிரச்னையில் மோதல்: 5 போ் மீது வழக்கு

தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இடப் பிரச்னை தொடா்பான முன்விரோதத் தகராறில் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இடப் பிரச்னை தொடா்பான முன்விரோதத் தகராறில் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தொண்டி அருகே டி.புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (43) என்பவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ராஜாவுக்கும் (32), இடப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கருப்பையா, ராஜாவின் உறவினரான ஆறுமுகம் மனைவி பாண்டியம்மாள்(48) வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தாா். அப்போது, இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இது குறித்து பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் கருப்பையா, இவரது மனைவி லட்சுமி (35) ஆகியோா் மீதும், லட்சுமி அளித்த புகாரின் பேரில் ராஜா, நாகனியைச் சோ்ந்த தாமரை செல்வி (27), சூச்சனியைச் சோ்ந்த பவித்ரா ஆகிய 3 போ் மீதும் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.