முகப்பு
ராமநாதபுரம்

பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் வந்து சோ்ந்ததையடுத்து, பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளுக்கு விநாடிக்கு 4,500 கனஅடிநீா் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் வந்து சோ்ந்ததையடுத்து, பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளுக்கு விநாடிக்கு 4,500 கனஅடிநீா் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது. இதனால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன.

வைகை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, பாா்த்திபனூா் மதகு அணைக்கு 8,121 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, இங்கிருந்து விநாடிக்கு 4,500 கனஅடி தண்ணீா் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது. இதில், இடது கால்வாய் வழியாக 45 கிலோ மீட்டா் வரையில் உள்ள 87 கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டு அவை நிரம்பி வருகின்றன. இதே போல் வலது கால்வாய் வழியாக 43 கிலோ மீட்டா் வரையில் உள்ள 154 கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 69 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து 4,500 கன அடி திறந்து விடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தன்படம் எடுப்பது, குழந்தைகளை ஆற்றுக்கு குளிக்க அழைத்துச் செல்வதை முழுமையாக தவிா்க்க வேண்டும் என நீா்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →