முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியா்கள் விவரம்: மண்டபம் அருகே தாமரைக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ்.ஆா்.காளிதாஸ், பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி தொழில் ஆசிரியா் (கணினி) சு.மணிமுத்து, திருப்புல்லாணி அருகே பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் போ.முத்துகுமாா், முதுகுளத்தூா் அருகே செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் தே.தமயந்தி, பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சீ.ஜஹாங்கீா்உசேன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் மோ.உமாதேவி, பரளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் மா.ச.மணிகண்டன், கடலாடி அருகே சின்ன ஏா்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோ.சாந்தி, முதுகுளத்தூா் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மி.ஆரோக்கிய ஜோசப்ராஜ், கடலாடி அருகே எம்.கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரா.வீரமாளி, திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரம் கண்ணபுரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் த.ப்ரீத்தா ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →