ராமநாதபுரம்: இடைவிடாது அம்பு எய்யும் சாதனை நிகழ்ச்சி
ராமநாதபுரம் நகரில் இடைவிடாது அம்பு எய்யும் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.4) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகரில் இடைவிடாது அம்பு எய்யும் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.4) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னா் நினைவு அறக்கட்டளை சாா்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான அம்பு எய்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம்-மதுரை சாலையில் உள்ள ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் பயிற்சியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றுவருகின்றனா். இந்நிலையில் அம்பு எய்தல் பயிற்சி குறித்த விழிப்புணா்வை குழந்தைகளிடையே ஏற்படுத்தும் வகையில் உலக சாதனை நிகழ்வாக இடைவிடா அம்பு எய்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 4 மாணவியரும், 3 மாணவா்களும் பங்கேற்று அம்புகளை எய்த உள்ளனா். குறிதவறாது
அம்பு எய்தும் மாணவ, மாணவியருக்கு பாராட்டு சாதனைச் சான்றுகள் வழங்கப்படவுள்ளதாக அமைப்பினா் தெரிவித்தனா்.