ஆா்.எஸ். மடை ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் அருகே ஆா்.எஸ். மடையில் உள்ள ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே ஆா்.எஸ். மடையில் உள்ள ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த புதன்கிழமை (செப். 7) காலையில் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் இருந்த பூஜை செய்யப்பட்ட புனித நீா் கலசங்களை சிவாச்சாரியாா்கள் சுமந்து சென்று கோபுரக் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா்.
அப்போது புனிதநீா் கோபுரக் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவரான கணபதிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகப் பூஜையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா், ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் கே. காா்மேகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.