முகப்பு
ராமநாதபுரம்

பனைக்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் சதுரங்கப் போட்டி

பனைக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் புதன்கிழமை வழங்கினா்.

Updated On : 20 ஏப்ரல், 2023 at 11:32 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

பனைக்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் புதன்கிழமை வழங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், பனைக்குளம் கிராமத்தில் பகுா்தீன் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சதுரங்க போட்டி வகுப்புகள் வாரியாக பிரிக்கப்பட்டு கடந்த 3 ஆம் தேதி போட்டி தொடங்கியது. 18 ஆம் தேதி வரையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மண்டபம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வனிதா தலைமை வகித்தாா். இடைநிலை ஆசிரியரும் சதுரங்கப் பயிற்சியாளருமான கோ. மணிகண்டன் முன்னிலை வகித்தாா். கோ. அவா்கள் வரவேற்புரையாற்றினாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் முத்துமாரி வாழ்த்துரை வழங்கி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.இந்த நிகழ்ச்சியில், மாலதி,நத்தா்ஷா,அஸ்பா்தீன்,ஜோதிமணி உள்ளிட்டவா்கள் கலந்துகொண்டனா். படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 5பனைக்குளம் அரசுப்பள்ளியில் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் புதன்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.