முகப்பு
ராமநாதபுரம்

பம்மனேந்தலில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கமுதி அருகே உள்ள பம்மனேந்தலில் அமைந்துள்ள ஸ்ரீகுருநாதசுவாமி கோயில் 47- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

கமுதி அருகே உள்ள பம்மனேந்தலில் அமைந்துள்ள ஸ்ரீகுருநாதசுவாமி கோயில் 47- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், ஆராதனை, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பொங்கல் வைத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், சேத்தாண்டி வேடம் அணிந்தும் சுவாமி தரிசனம் செய்தனா். விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட பகுதிகளிலிருந்து 26 மாட்டு வண்டிகளுடன் அதன் சாரதிகள் கலந்து கொண்டனா். 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டி பம்மனேந்தல்- கமுதி சாலையில் 12 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது. மூன்று பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு பணமுடிப்பு, நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.