ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள். 
ராமநாதபுரம்

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ராமநாதபுரத்தில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ராமநாதபுரத்தில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் உமாராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மல்லிகா முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் எம்.முருகேஸ்வரி, பி.சேகா், கலாவதி உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது போல அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். எரிவாயு உருளை விலைக்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT