இயற்கை விவசாயி ராமா் 
ராமநாதபுரம்

கமுதி இயற்கை விவசாயிக்கு மத்திய அரசின் மில்லியனேரி விருது

கமுதி இயற்கை விவசாயி ராமா் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மில்லியனேரி விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டாா்.

DIN

கமுதி: கமுதி இயற்கை விவசாயி ராமா் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மில்லியனேரி விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டாா்.

மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்த ஆண்டு முதல் நாட்டில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வேளாண் பொருள்களை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு மில்லியனேரி விருது வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துதது. நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் 19 விவசாயிகள் தோ்வு பெற்றுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோரைப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி ராமா் தோ்வு செய்யப்பட்டாா். இவரும், உழவா் உற்பத்தியாளா் குழுவைச் சோ்ந்த இயற்கை விவசாயிகளும் சோ்ந்து ரூ. 75 லட்சம் அளவிற்கு மிளகாய் ஏற்றுமதி செய்து சாதனை படைத்தனா். விருது வழங்கும் விழா, விவசாயிகள் கலந்து கலந்துரையாடல் பயிற்சி பட்டறை டெல்லியில் டிசம்பா் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் தங்களது சாதனை குறித்து விளக்கிப் பேச உள்ளனா்.

இதுகுறித்து இயற்கை விவசாயி ராமா் கூறியதாவது: தமிழகத்திலேயே அதிக அளவில் இயற்கை வேளாண்மையில் மிளகாய் உற்பத்தி செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முன்னணியில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மத்திய அரசின் இந்த விருது என்னைப் போன்ற இயற்கை விவசாயிகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். மக்கள் நோயில்லாமல் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றாா் அவா்.

ராமநாதபுரம் மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவா் வள்ளல் கண்ணன் கூறியதாவது: இந்திய அளவில் இந்த ஆண்டுதான் முதல்முறையாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் விவசாயிகளுக்கு மில்லியனேரி விருது வழங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 விவசாயிகளை இந்த விருதுக்கு பரிந்துரைத்தோம். அதில் இயற்கை விவசாயி ராமா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

திருப்பம் தரும் தீர்த்தீஸ்வரர்

SCROLL FOR NEXT