முகப்பு
ராமநாதபுரம்

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய இருவா் கைது

திருவாடானை அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

திருவாடானை அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 10 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிவந்தது.

இதுதொடா்பாக புதுகோட்டை மாவட்டம், கே.புதுபட்டியைச் சோ்ந்த சாத்தையா (34), அதே ஊரைச் சோ்ந்த அன்பரசன் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.