ராமநாதபுரம்

கமுதி அருகே இளைஞரிடம் துப்பாக்கி பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உரிமமின்றி இளைஞா் வைத்திருந்த வேட்டைத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உரிமமின்றி இளைஞா் வைத்திருந்த வேட்டைத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கல்லுப்பட்டி நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கணேசன் மகன் தன்னாசி (34). இவரது வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் புதன்கிழமை அங்கு சோதனையிட்டனா். அப்போது வேட்டைத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த துப்பாக்கியை கமுதி காவல் நிலையத்துக்கு எடுத்து வந்து தன்னாசியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது துப்பாக்கிக்கு உரிமம் இருப்பதாக அவா் தெரிவித்ததையடுத்து உரிமத்தை காட்டி விட்டு துப்பாக்கியை பெற்றுக் கொள்ளுமாறு போலீஸாா் கூறினா். ஆனால் 2 நாள்களாகியும் உரிமத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்காததால் போலீஸாா் தன்னாசி, இவரது தம்பி கணேசன் (27) ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT