ராமநாதபுரம்

மோக்கா புயல்: ராமேசுவரத்தில் சூறைக் காற்று

DIN

வங்கக் கடலில் மோக்கா புயல் உருவாகியுள்ள நிலையில், ராமேசுவரத்தில் சூறைக் காற்று வீசியது. பாம்பன் துறைமுத்தில் இரண்டாவது நாளாக இரண்டாம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வழுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தற்போது மோக்கா புயலாக நிலை கொண்டுள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்டிருந்த இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

தனுஸ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசியது. இதனால் மீனவா்கள் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக நிறுத்தினா்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT