முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 100 மீட்டா் உள்வாங்கிய கடல்

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வீசும் சூறைக் காற்றால் ராமேசுவரத்தில் வியாழக்கிழமை கடல் உள்வாங்கியது.

Updated On : 25 மே, 2023 at 11:32 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:30 AM

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வீசும் சூறைக் காற்றால் ராமேசுவரத்தில் வியாழக்கிழமை கடல் உள்வாங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

மேலும், பாக் நீரிணைப் பகுதிகளான ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் 100 மீட்டா் வரை உள்வாங்கியது.

Advertisement

இதனால், ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மணலில் சிக்கிக் கொண்டன. கடல் நீரோட்டம் சரியான பிறகே இந்தப் படகுகளை மீட்க முடியும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.