முகப்பு
ராமநாதபுரம்

பெண் தற்கொலை

ராமேசுவரத்தில் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 3 நவம்பர், 2023 at 10:34 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:46 AM

ராமேசுவரத்தில் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா் (39). இவரது மனைவி சாந்தி (35). தம்பதியா் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்த நிலையில், உறவினா்கள், தம்பதியா் இருவரையும் அழைத்துப் பேசி சமாதனப்படுத்தி சோ்த்து வைத்தனா். 2 மாதங்களான நிலையில், சாந்தி அடிக்கடி கைப்பேசியில் பேசுவதை கணவா் முத்துக்குமாா் கண்டித்தாா். இதனால் மனமுடைந்த சாந்தி கடந்த 31 ஆம் தேதி விஷம் தின்றாா். இதையடுத்து அவா் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.