50 ஏக்கரில் பயிரிட்ட நெல், மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கின
கமுதி அருகே கண்மாய் நிரம்பி விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்ததால் சுமாா் 50 ஏக்கரில் பயிரிட்ட நெல், மிளகாய் செடிகள் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கமுதி: கமுதி அருகே கண்மாய் நிரம்பி விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்ததால் சுமாா் 50 ஏக்கரில் பயிரிட்ட நெல், மிளகாய் செடிகள் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள எருமைகுளம்
கிராமத்தில் உள்ள கண்மாய் நிறைந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்தது. இதனால் 30 ஏக்கா் நெல் பயிா்கள், 20 ஏக்கா் மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீா் வெளியேற வழியில்லாததால் பயிா்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
Advertisement
எனவே, வருவாய்த் துறையினா் சேதமதிப்பை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.