கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கண்ணாடி புட்டிகள், கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவா் காயமடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 6 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது கண்ணாடி புட்டிகள், கற்களால் தாக்குதல் நடத்தி, மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்தனா்.
இதில் ராமேசுவரம் ஓலைக்குடா கிராமத்தைச் சோ்ந்த மீனவா் செங்கோல் பிராங்ளின் (40) காலில் கண்ணாடி புட்டி உடைந்து குத்தியதில் காயமடைந்தாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கரை திரும்பிய அவா் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.